இந்தியா இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கவுள்ளது

இந்திய மத்திய அரசாங்கம், இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கவுள்ள தெனத் தெரிவிக்கப்படுகிறது. எறிகணைகள், ராடார்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லெண்ண அடிப்படையில் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இராணுவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை மீது சீன அரசாங்கம் காட்டி வரும் கரிசனைகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, ராடார்கள் மற்றும் எறிகணைகளை இந்திய அரசாங்கம் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்ட சில ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார், பாதுகாப்புச் செயலாளர் கேதபாய ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரதிப் குமாருடன் முப்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply