தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி
மக்கள் முழுமையாக மீள்குடி அமர்வதற்கு முன்பாக வாக்காளர் பதிவுகளை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்து வத்தை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
இலங்கையில் போர் முடிபடைந்து மக்கள் முழுமையாக மீள்குடியேற முன்பாக வடக்கு மாவட்டங்களில் வாக்காளர்பதிவுகளை மேற்கொண்ட அரசாங்கத்தின் நடவடிக்கையானது தமிழ் மக்களுக்கு பாதகமான ஒன்றே என்று தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இலங்கை தேர்தல் திணைக்களம் போர் முடிந்த பின்னர் வாக்காளர் பதிவுகளை நடத்தியுள்ளமை குறித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வாக்காளர் பதிவுகளின் போது வடக்கு மாவட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கை 40 வீதத்தால் குறைந்துள்ளதாக தேர்தல் அதிகாரி கள் கூறியிருந்தார்கள்.இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் குறை வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். போர் முடிந்த போதிலும் இந்தி யாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற மக்கள் இன்னமும் நாடுதிரும்ப வில்லை. பலர் மேற்கத்தேய நாடுகளுக்கு சென்றிருக்கின்ற போதிலும் அவர் களும் நாடுதிரும்புவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பதை சுட் டிக்காட்டியுள்ள பிரேமச்சந்திரன் ஆனால் அதற்கான கால அவகாசம் எதுவும் வழங்கப்படாமல் அரசாங்கம் இந்த வாக்காளர் பதிவை அவசர அவசரமாக செய்வது தவறு என்று கூறுகிறார். இது குறித்து இலங்கை ஜனாதிபதியிடமும் ஏனைய பல தரப்பினரிடமும் கூட தாம் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply