நல்லிணக்க ஆணைக்குழுவில் புலிகளின் ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுவது கேலிக்கூத்து

நல்லிணக்க ஆணைக்குழுவில் புலி ஆதரவாளர்கள் இருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்திருப்பதானது அதன் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பின்னணியென எண்ணத் தோன்றுகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் புலி ஆதரவாளர்கள் இருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்துள்ளார். இது நகைப்புக்கிடமானது. ஏனெனில் இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க இவரது கருத்தானது நல்லிணக்க ஆணைக்குழு மீதான நம்பிக்கைக்கு தமிழ்த் தரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறுபட்ட ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்ட போதும் எவையும் இறுதி அறிக்கையை முன்வைத்ததாக தெரியவில்லை. அதற்கு என்ன நடந்ததென்று தெரியாத வரலாறே இருந்து வந்துள்ள நிலையில் அவரது கருத்தினால் தமிழ் தரப்பின் ஆணைக்குழு மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின்மை மேலும் பலவீனப்படும்.

இதைவிட நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள உறுப்பினர்களின் எதிர்காலச் செயற்பாட்டுக்கு பாரிய சிக்கல் இக்கருத்தால் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சார்பான அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இவ்வாறான கருத்தினை தெரிவிப்பதன் மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பின்னணியென எண்ணத்தோன்றுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply