இலங்கையின் தேசிய பாதுகாப்பில் யாழ், மக்களே அதிகம் அக்கரை : பிரதமர் டி.எம்.ஜயரட்ன

இலங்கையின் தேசிய பாதுகாப்பில் யாழ், மக்களே அதிகம் அக்கரை செலுத்து வருவதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யாழ், வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தமிழ் மொழியில் சுமார் 18 நிமிடங்கள் தொடர்ச்சியாக உரையாற்றியமை விசேட அம்சமாகும்.

பிரதமர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தேசிய பாதுகாப்பு தினத்தை யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பதை இட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் வந்தபோது நாம், தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட்டோம்.

நாட்டில் தற்போது ஆயுத தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது, நாட்டிற்கு இனி ஒரு தீவிரவாதம் வருமாயின் அது இயற்கை அனர்த்தத்தின் மூலமேயாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அதனையும் முற்றாக ஒழிக்க முடியும். என்றார் பிரதமர் டி.எம்.ஜயரட்ன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply