தமிழகத்தில் இன்று படகு கவிழ்ந்து 13 பேர் பலி

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுற்றுலா சென்ற படகுகள் மூழ்கியதில் 13 பேர் பலியாகியுள்ளனர் இவர்களில் 10 பேர் பெண்கள். ஞாயிற்றுகிழமையன்று காலை பெரியபட்டணத்தை சேர்ந்த ஆண்கள் ஒரு படகிலும், பெண்கள் ஒரு படகிலும் சென்றுள்ளனர். இதில் பெண்கள் சென்ற படகில் நீர் புகுந்ததை தொடர்ந்து அப்படகு மூழ்கியுள்ளது.

பலியானவர்களில் 10 பேர் பெண்கள், 2 பேர் சிறுமிகள், ஒருவர் 16 வயது சிறுவன். இந்த தகவல்களை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்தார். விபத்து ஏற்பட்டவுடன் கடலோர காவற்படைக்கும், இந்திய கப்பற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து விரைந்து வந்த மீட்பு ஹெலிகாப்டர் மற்றும் அதிவேக விரைவு படகுகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதி இந்திய கடல் எல்லைக்குள் உள்ளது. இனிவரும் காலங்களில் அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் இது போன்று சுற்றுலா செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply