தமிழீழத்திற்கு ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் வழங்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீக்கப்பட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழர் இறையாண்மை மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலங்கை தமிழ் இடம்பெயர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் தொல் திருமாளழவன் தெரிவித்துள்ளார். லட்சக் கணக்கான இலங்கை மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
தமிழீழத்திற்கு ஐக்கிய நாடுகள் அங்கீகாரத்தை வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.திட்டமிட்டபடி தமிழர்களையும், தமிழ் மொழியையும் அரசாங்கம் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளின் தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply