நாட்டை வெற்றிப் பாதையில் இட்டு செல்லும் ஆண்டாக அமையட்டும்

பிறந்துள்ள புத்தாண்டானது நாட்டினை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் ஒரு ஆண்டாக மாற்றியமைப்பதற்கு அனை வருக்கும் சக்தியும் பலமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- புத்தாண்டு பிறக்கும் இந்தச் சந் தர்ப்பத்திலே நாம் எதிர்காலத்தை திடசங்கற்பம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த எதிர்பார்ப்புக்கள் போன்ற உணர்வுகளுடன் உற்று நோக்குகின்றோம். அவ்வாறான எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்குத் தேவையான சுதந்திரம், சமாதானம், அமைதி என்பன எமது தாய் நாட்டிலே நிலை நாட்டப்பட்டுள்ளமை நாம் பெற்றுள்ள பாரிய வெற்றியாகும்.

எதிர்காலத்தில் எமக்குள்ள பாரிய சவால் யாதெனில் எமது நாட்டினை உலகின் சிகரத்திற்கு கொண்டு செல்வதாகும். நாடு முழுவதி லும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பாரிய முயற்சிகள் பலவற்றில் காலடி எடுத்து வைக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டினை நாம் அடையாளப்படுத்துவோம். அவ்வாறே வெற்றிகளை அடைவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நாம் செய்த

அர்ப்பணிப்புக்களை இந்த ஆண்டிலே இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் அதிகரித்தல் வேண்டுமென நான் நம்புகிறேன்.

அதன் மூலம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கிடைக்காதுபோன பல விடயங்களை துரிதமாக மீளப் பெற்றுக் கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும். அனைவருக்கும் சமமாக பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்க்கையினை ஒளிமயமாக்குவதற்காகக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த ஆண்டின் எமது பிரார்த்தனையாகும்.

தாய் நாட்டினை ஒன்றுசேர்ப்பதிலும், நாட்டினை அபிவிருத்தி செய்வதிலும் முக்கிய காரணியாக தேசிய ஒற்றுமை காணப்படுகின்றது. எனவே, அனைத்து கோபதாபங்களையும் மறந்து ஒன்றிணைந்து முன்னேற வேண்டிய காலம் பிறந்துள்ளது. சகவாழ்வினை இல்லாதொழித்து மக்களையும், நாட்டையும் வீழ்த்துவதற்கு அணி திரண்டுள்ள அனைத்துச் சூழ்ச்சிகளும் அப்போது தான் தோல்வியடையும்.

நாம் மிகுந்த திடசங்கற்பத்துடன் செயற்பட்டு பொறுமையைக் கையாண்டு நாட்டு மக்களிடையே மிகுந்த பரஸ்பர புரிந்துணர்வையும், நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றிய நம்பிக்கையினையும் கட்டியெழுப்பினோம். அதனை மென் மேலும் உறுதி செய்வதற்கு இந்தப் புத்தாண்டிலே பிரார்த்தித்தல் வேண்டும். அவ்வாறு செயற்பட்டு பிறந்துள்ள புத்தாண்டானது நாட்டினை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் ஒரு ஆண்டாக மாற்றியமைப்பதற்கு அனைவருக்கும் சக்தியும் பலமும் கிடைக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

பிறந்துள்ள புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply