பொருட்களின் விலை அதிகரித்தாலும் தேர்தலில் தோல்வி கிடையாது
பொருட்களின் விலை அதிகரித்தாலும் தாங்கள் தேர்தலில் தோல்வியடைய மாட்டோம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய வெற்றியீட்டுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருப்பதாகவும், அது ஜனநாயகத்தின் வெளிப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் தற்போதுள்ள சவாலை எதிர்கொண்டு உள்ளூராட்சி சபை தேர்தல்களை வெற்றிகொள்ள தமது கூட்டமைப்பு இப்போதே தயாராக உள்ளதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply