ஆன் சான் சூ கீயை விடவும் சரத் பொன்சேகா மோசமாக நடத்தப்படுகின்றார் : கரு ஜயசூரிய
மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆன் சான் சூ கீயை விடவும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா மோசமாக நடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களை விடவும், அரசாங்கம் சரத் பொன்சேகாவை மோசமாக நடத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக அர்ப்பணிப்புடன் சரத் பொன்சேகா போராடி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மார் ஆட்சியாளர்கள் ஆன் சான் சூ கீயை வீட்டுக் காவலில் தடுத்து வைத்ததாகவும், இலங்கை அரசாங்கம் சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் சந்தர்ப்பத்தில், சரத் பொன்சேகா சிறையில் வாடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு உரிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த புத்தாண்டிலேனும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் சந்தர்ப்பத்தில், சரத் பொன்சேகா கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply