703 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : அரசாங்கம்

703 சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல்களுக்கு தலைமை வகித்தமை, குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை, புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஓமந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
குறித்த நபர்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட மாட்டாது எனவும், வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
 
2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply