அர்ப்பணிப்புடன் பணிபுரிய அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
நாட்டை மீட்டெடுப்பதில் காட்டிய அர்ப்பணிப்பை விட நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதில் பன்மடங்கு அர்ப்பணிப்பினை நாம் வழங்க வேண்டியுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் எதிர் கொண்ட சவாலைவிட நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் சவால் விசாலமானது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை வெற்றி கொள்வதில் முக்கிய பங்கு அரச ஊழியர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய வருடத்தில் ஜனாதிபதி செயலகத் தின் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்றுக் காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி செயலக ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடத்தில் எம்முன் பாரிய சவால்கள் உள்ளன. நாட்டை மீட்டெடுத்த தைப் போன்றே நாட்டைக் கட்டியெழுப்பு வதிலும் அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம். அதேபோன்று உதயமாகியுள்ள புதிய தசாப்தத்தில் நாட்டு மக்களுக்காக சேவை செய்வதில் அரச ஊழியர்கள் அணிவகுத்துச் செயற்படுவர் என நான் நம்புகிறேன்.
ஜனாதிபதி செயலக ஊழியர்கள் என்ற வகையில் உங்களிடம் பாரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் சேவை செய்யக் கிடைத்தமை உங்களுக்கான அதிஷ்டமாகும். அதன் மூலம் பிறரின் வாழ்க்கையை அதிஷ்டமாக்குவதற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும். அதேபோன்று ஏனைய அரச ஊழியர்களுக்கு முன்னுதாரணமானவர்களாக ஜனாதிபதி செயலக ஊழியர்கள் செயற்பட வேண்டும்.
ஜனாதிபதி செயலக செயற்பாடுகளிலேயே ஏனைய அலுவலக செயற்பாடுகள் தங்கியுள்ளன. அவர்கள் சிறந்த முன் னுதாரணத்தையே உங்களிடம் எதிர் பார்க்கின்றனர். அதனால் இங்கு பணி புரியும் அனைவரும் மனித நேயத்துடன் இந்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
இன்று மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நாளை செய்யலாம் என ஒத்திப் போட வேண்டாம். இன்றைக் கான பணிகளை இன்றே நிறைவு செய்ய வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நாட்டில் பலம் வாய்ந்த அரச சேவையுள்ளது. நாட்டு மக்களின் சுபீட்சத்திற்காக முழு அரச துறையும் செயற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply