தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞரை விடுவிப்பதாக கூறி பணம் பெற்றவர்கள் கைது
கொழும்பில் காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவரை விடுதலை செய்து தருவதாக கூறி, அந்த இளைஞனின் உறவினர்களிடம் 10 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட இரண்டு பேரை வவுனியா காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். 10 லட்சத்தை பெற்றுக்கொண்ட பின்னரும், காவற்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் விடுதலை செய்யப்படாததால், அவரின் உறவினர்கள் தம்மிடம் பணத்தை பெற்றுக்கொண்ட நபர்கள் குறித்து வவுனியா காவற்துறையில் முறைப்பாடு செய்தனர்.
எனினும் அவ்வாறு எவரும் காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் சந்தேக நபர்கள் இளைஞனின் குடும்பத்தினரை ஏமாற்றி, பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் வவுனியா பிரதேசத்தில் இருக்கும் முக்கியமான மோசடியாளர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply