நீதித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் : ஹக்கீம்

நாட்டின் நீதித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு காரணங்களுக்காக சில வழக்குகள் நீண்ட காலமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர், நீதவான்கள் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிடோரின் ஒத்துழைப்புடன் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நீதி அமைச்சிற்காக வரவு செலவுத் திட்டத்தில் 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதில் 150 மில்லியன் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதிலும் 65 நீதிமன்றங்கள் உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நீதி அமைச்சுப் பொறுப்பை வகிக்கக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளினால் சமதான முனைப்புக்கள் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply