யாழ்ப்பாணம் சுபாஷ் ஹோட்டலை உரிமையாளரிடம் ஒப்படைக்க முடிவு
யாழ்ப்பாண நகரின் மத்தியில் இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் சுபாஷ் ஹோட்டல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் உரிமையாளரிடம் கையளிக்கப்பட விருப்பதாக யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.51வது படைப் பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் பகுதியிலுள்ள அனைத்து தனியார் கட்டடங்களும் பொது மக்களிடம் கையளிக்கப்படவிருப்பதுடன், 51வது படைப் பிரிவின் தலைமையகம் பிறிதொரு இடத்துக்கு மாற்றப்படவிருப்பதாக அவர் கூறினார். யாழ். சென்றிருக்கும் ஊடகவியலாளர்கள் குழுவைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
யாழ்நகர மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்படவிருப்பது டன், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆங்காங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்ந்து வருவதாகவும், கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுமென்றும் ஹத்துருசிங்க தெரிவித்தார். மழை பெய்து வருவதால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் காலதாமதம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply