யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் கோலாகல பொங்கல் விழா
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இம்முறை தைப்பொங்கல் விழாவை கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.வட பகுதியில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பொங்கல் விழாவில் கலந்து சிறப்பிக்க வுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு நடைபெறவுள்ள கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்க வுள்ளார்.
பாரம்பரிய கைத்தொழில், சிறு தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், யாழ். மேயர் உட்பட அதிகாரிகளின் பங்களிப்புடன் வட பகுதி மக்களினால் இந்த பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply