பிராங்பேர்ட் தாக்குதல் சம்பவம்: தமிழர்களின் காதில் பூ சுத்திய புலிகள் நடந்தது என்னா!
டிசெம்பர் 7ந்திகதி பிராங்பேர்ட் நகரில் இலங்கை அரசு தூதரகம் நடாத்திய புகைப்படக் கண்காட்சிக்கு சென்று வந்த தமிழர் ஒருவரை சிங்களக் காடையர்கள் தாக்கியது குறித்து புலிகளின் செய்தி ஊடகங்கள் உட்பட தீபம் மற்றும் தென்றல் ஜீ.ரி.வி போன்ற புலிசார்பு தொலைக்காட்சிகள் செய்தி வெளிட்டிருந்தன. இது தொடர்பாக தேனீயில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. இக்கட்டுரையில் சில கேள்விகள் தாக்குதல் தொடர்பாகவும் புலிகளின் செய்தியின் நம்பகத்தன்மை குறித்தும் எழுப்பப்பட்டிருந்தது. கடந்த 20ந்திகதி புலிகள் இத்தாக்குதலைக் கண்டித்தும் இலங்கையில் இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் எனவும் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர். இவ்வூர்வலத்திற்கு சென்ற பெரும்பாலானோர் புலிகளின் ஊடகச்செய்திகளை விழுங்கிக் கொண்டு ஜெர்மனியில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லையா என சுலோகங்களை தாங்கி சென்றனர்.
புலிகளைப் பொறுத்தமட்டில் தற்போதைக்கு இலங்கை அரசு நடாத்துகின்ற யுத்தத்தை நிறுத்துவதற்கு பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள். ஏனெனில் இந்த யுத்தம் புலிகளை மட்டுமல்ல புலிகளின் உலகளாவிய செயற்பாடுகள் அனைத்தையும் முடக்கி விடும் என்பதை அனைவரும் அறிவார்கள். புலிகளின் பெயரால் புலம்பெயர்நாடுகளில் வசூலிக்கப்படும் நிதியில் வாழுகின்ற புலிப்பிரமுகர்கள் மற்றும் நிதிசேகரிப்பவர்கள் அனைவருக்கும் யுத்த நிறுத்தம் தேவையானதொன்றாகும்.
பிராங்பேர்ட் நகரத்தில் நிதிசேகரிப்பாளர் இருவரும் நிதிப்பிரச்சினை காரணமாகவே தாக்கப்பட்டிருந்தார்கள். ரவிராஜ் என்பவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர்தான் மோசமாக தாக்கப்பட்டவர் அதனை தடுத்து நிறுத்தப்போன சின்னத்தம்பி என்பவர் வெட்டுக்காயத்திற்குள்ளானார். பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை புலிகள் உடனே அரசியல் பிரச்சாரமாக்கினார்கள். இங்குதான் சிங்களக் காடையர்கள் தாக்கினார்கள் என புதிய பிரச்சாரமொன்றை அவிழ்த்து விட்டார்கள்.
இச்சம்பவம் குறித்து இன்னும் சில கேள்விகள் உள்ளன. சிங்களக்காடையர்கள் புகைப்படக்கண்காட்சிக்கு சென்றிருந்த தமிழரைத்தாக்கியிருந்தார்கள் என செய்தி வெளியிட்ட புலிகளின் ஊடகங்கள் இதுவரைக்கும் தாக்கப்பட்ட தமிழர் ஏன் இதுவரை பொலிஸில் முறைப்பாடு எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் மத்தியில் வெளியிடத்தயாராக உள்ளனரா. பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை தூதரகத்திடம் தொடர்பு கொண்ட போது இதுவரைக்கும் பொலிசார் தம்மிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை எதுவும் மேற்கொள்ள வில்லையென்றும் தெரிவித்ததுடன் தாம் இது தொடர்பாக பிராங்பேர்ட் பொலிசாரிடம் தொடர்பு கொண்டபோது தாக்கப் பட்டவர்கள் இதுவரைக்கும் தம்மிடம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்கள்.
தாக்கப்பட்டவர் ஏன் பொலிஸ் விசாரணை கோரவில்லை என்கிற சந்தேகம் எழுகின்றது. அப்படி விசாரணை நடைபெற்றால் உண்மையாக நடைபெற்ற சம்பவங்கள் வெளி வந்து விடும். பிராங்பேர்ட்டில் மட்டுமல்ல இதுவரைக்கும் ஜெர்மனியில் எந்தவொரு இடத்திலும் புலிகளின் நிகழ்ச்சிகளிலோ அல்லது அவர்கள் நடாத்துகின்ற போராட்டங்களிலோ சிங்களவர்கள் தலையீடு செய்து குழப்பம் விளைவித்ததாக செய்திகள் எதுவுமில்லை. அப்படியிருக்கையில் புலிகள் இந்தச் சம்பவத்தில் சிங்களக்காடையர்கள் தாக்கினார்கள் என செய்திகள் வெளியிட்டதுடன் கண்டன ஊர்வலம் ஒன்றை நடாத்தியிருப்பது அவர்களின் அரசியல் பிரச்சாரமாகும்.
அரசியல் இராணுவ தோல்விகளில் புலிகள் மிகவும் மட்டமான நிலைக்கு சென்று பிரச்சாரம் செய்வார்கள் என்பதை மேற்படி சம்பவம் மீண்டும் நிருபணம் செய்திருக்கிறது. தாக்கப்பட்டவர் புகார் கொடுக்காதவரை ஜெர்மன் பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்க மாட்டார்கள். நிலமை இப்படியிருக்க பிராங்போட் இலங்கை தூதரகத்தை அகற்றப்போராடுவோம் என புலிகள் புலுடா ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளனர். முதலில் பொலிஸ் விசாரணை நடைபெற வேண்டும். அதற்கு தாக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வேண்டும். கையில் காயத்துடன் நிற்கின்ற புகைப்படத்தை இணையங்களில் போடுவதற்கு இருக்கின்ற துணிவு விசாரணைக்கு ஏன் வர மறுக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply