கிழக்கில் உள்ளுராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: த.தே.கூ
தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் நடாத்த திட்டமிட்டுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல்களை கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் ஒத்திவைக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.இதுதொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவிற்கு நேற்று மாலை கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாவது,
கிழக்கு மாகாணத்தில் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் தேர்தலொன்றிற்கு தயாரான நிலையில் இல்லை. எனவே தேர்தலை பிறிதொரு திகதியில் நடாத்த ஏற்பாடுசெய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply