பிரேஸிலில் பெரு வெள்ளம்: 270 பேர் பலி

பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.கடந்த சில நாட்களாக அங்கு தொடரும் வெள்ள நிலமை காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளர்.

மண்சரிவுகள் காரணமாக பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளன.
அந் நாட்டு அரசாங்கம் பாதிக்கப்பட்டோருக்கென 780 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply