இந்திய நிவாரணம் இன்று இலங்கை வந்தடையும்
வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு தொகுதி நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைத்துள்ளது. நிவாரணப் பொருள்களைத் தாங்கிய விமானம் இன்று கொழும்பை வந்தடையும் என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சீனி, பால்மா, சுத்தமான குடிநீர், பாய்கள், படுக்கை விரிப்புக்கள் உள்ளிட்ட உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நிவாரணப் பொருட்களே இலங்கைக்கு எடுத்து வரப்படுவதாகவும், இந்நிவாரணப் பொருள்களை இன்றைய தினமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த அதிகாரி தினகரனுக்குத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply