வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு கனடா உதவி
இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனேடிய அரசு உதவி வழங்க முன்வந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் மக்களுக்கு உடனடியாக உதவவேண்டி உள்ள நிலையில் இலங்கையில் உள்ள இலங்கைக்கான கனேடிய பொருளாதார அபிவிருத்தி உதவி நிலையம் சிறப்பாக செயற்படக்கூடிய தருணம் இது என்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசும் மற்றும் ஏனைய முகவர்கள் கேட்டுக்கொண்டவை தொடர்பிலும் அதிக கவனம் கெள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கையில் உள்ள கனேடிய பொருளாதார அபிவிருத்தி உதவி நிலையம், அவசர அடிப்படைத் தேவைகளையும் மற்றும் தங்குமிட வசதிகளையும் சுமார் 6000 குடும்பத்திற்கு வழங்ககவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாங்கள் இவ்வாறு உதவி வழங்குவது மக்களை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமன்றி, எதிர்காலத்தில் இக்கட்டான நிலைகளில் அவர்களும் மற்றவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்பதற்காக எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply