மட்டக்களப்பிற்கு உடனடி நிவாரணம் பசில் 50 மில்லியன் ஒதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் உடனடியாக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ் இன்று காலை சென்றிருந்தார். பிரதி அமைச்சர் வி.முரளிதரனின் விசேட அழைப்பின் பேரில் அங்கு சென்ற அமைச்சர், அனர்த்தங்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்குகொண்டார்.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், வீதிகள், விவசாய நிலங்கள் என்பன குறித்து உடனடியாக ஆய்வறிக்கை சமர்பிக்குமாறும், அதற்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ் உறுதியளித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply