வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் வழங்கிய வெள்ள நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 26.7 மில்லியன் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.இதில் 400 கூடாரங்கள், 2000 படுக்கை விரிப்புக்கள் உள்ளிட்ட பல நிவாரணப் பொருட்கள் காணப்படுவதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கவனத்தில் கொண்டு இன்னும் சில நிவாரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply