நிரந்தர சமாதானத்துக்காக அனைவரும் ஒன்றிணைவோம் ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து

நாட்டில் நிரந்தர சமாதானம் சகவாழ்வு, சமத்துவம், சுபீட்சம் ஆகியன நீடித்து நிலைக்க நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, தமிழ் இந்துக்களின் தனிப்பெரும் பாரம்பரியத்தையும் கலாசார விழுமியங்களையும் வெளிப்படுத்துகின்ற இன்றைய தைப்பொங்கல் உழவர்களின் திருநாள். இந்துக்களின் பெருநாள் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள். சூரிய நமஸ்காரம் மூலம் தனிச்சிறப்புடன் உழவுத் தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் உன்னதநாளாக தைப்பொங்கல் போற்றப்படுகின்றது. அபிவிருத்தி எனும் பொற்கதிரோனை நோக்கி வீறுநடைபோடும் இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற இந்துக்கள் இன்று உலக இந்துக்களுடன் இணைந்து கொண்டாடும் உவகைத் திருநாள்.

தைத்திருநாளில் மக்களிடையே நல்லுறவு வலுப்பெற்று பயம், சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை, புரிந்துணர்வு என்பன நீடித்து நிலைக்க வேண்டும் என்ற நல்ல மனங்களின் பிராத்தனையில் நானும் இணைந்து கொள்கின்றேன்.

எமது நாட்டில் நிரந்தர சமாதானம், சகவாழ்வு, சமத்துவம், சுபீட்சம் ஆகியன நீடித்து நிலைக்க நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படுவோமென இந்த தைப்பொங்கல் தினத்தில் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply