கேரள மலைப்பாதையில் பயங்கர விபத்து. அய்யப்ப பக்தர்கள் 102 பேர் பலி

சபரிமலைக்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 102 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 50 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்திலேயே இந்த விபத்து நடந்துள்ளது. மகர ஜோதி தரிசனத்தின் பின்னர் சொந்த இடங்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது.வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். பக்கதர்களை ஏற்றிக்கொண்டு குறுகலான பாதையில் வந்த ஜீப் ஒன்று திடீரென இடை நடுவே நிற்கவே அதை மீண்டும் இயக்கிய போது அவ்வண்டி நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து கட்டுப்பாடு இல்லாமல் ஓடி பிறகு பள்ளத்தில் விழுந்துள்ளது. ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் இருட்டில் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு அதிகம் பேர் உயிரிழக்க நேர்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply