இந்திய உறவை பாதிக்கும் வகையில் இலங்கை கடற்படை செயற்படுவதில்லை
இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான உறவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் கடற்படையினர் எந்த விதத்திலும் செயற்படுவ தில்லை என்று புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க தெரிவித்தார். இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்த விதமான உண்மைகளும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிப்பதுடன் முற்றாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் 17 வது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க நேற்று கடற்படைத் தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போதைய நவீன யுகத்தில் ராடார், செய்மதி போன்ற தொழில்நுட்ப வசதிகள் நிறைந்து காணப்படும் நிலையில் அவ்வாறன குற்றஞ்சாட்டுக்களை இவற்றை பயன்படுத்தி நிரூபிக்க முடியும். ஆனால் அவ்வாறான எந்த சாட்சிகளும் கூட இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
தளபதி உட்பட உயர் அதிகாரிகளின் எந்தவொரு உத்தரவுமின்றி கடற்படையினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை. அவ்வாறான தேவைகள் அவர்களுக்கு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் தனது தளபதிகளை மீறி கடற்படையினர் எந்தவொரு தாக்குதல்களையும் நடத்துவதில்லை.
அவ்வாறு நடந்துகொள்வது தாய் நாட்டுக்கு செய்யும் துரோகமாக கருதப்ப டும். அவ்வாறு மீறி நடக்கும் எந்த ஒரு கடற்படையினரையும் நாங்கள் பாதுகாக்கப் போவதில்லை என்றும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply