சங்குப்பிட்டி பாலம் நேற்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு

யாழ். குடாநாட்டை நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் இணைக்கும் வகையில் யாழ்ப்பாணம் – மன்னார் A32 நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சங்குப்பிட்டி பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நேற்று  திறந்து வைக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 4 மணியளவில் விசேட ஹெலிகொப்டரில், வருகை தந்த ஜனாதிபதி நாடாவை வெட்டி பாலத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் மக்களோடு மக்களாக பாலத்தினூடாக அடுத்த பக்கத்தை வந்தடைந்தார்.

288 மீட்டர் தூரமும் 7.4 மீட்டர் அகலமும் கொண்ட இப் பாலம் இரண்டு ஓடு பாதைகளைக் கொண்டது. 1037 மில்லியன் ரூபா செலவில் உருவான இப்பாலம் பிரிட்டிஷ் அரசின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதையடுத்து மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடை யிலான தூரம் சுமார் 110 கிலோ மீட்டரினால் குறையும். இதன்படி 3 மணித்தியால பயணக்காலம் குறைகிறது.

துறைமுக மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் கண்காணிப்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உருக்கு பாலப் பிரிவு இந்த பாலத்தை நிர்மாணித்துள்ளது. நாம் சொல்வதை செய்யும், செய்வதை சொல்லும் அரசியல்வாதிகள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு தமிழில் உரையாற்றும் போது கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply