யாழ்ப்பாணத்தில் இன்று பொங்கல் விழா; ஜனாதிபதி பிரதம அதிதி

வட பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் போது, வட பகுதியைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு பெறுமதியான பரிசில்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி அதிதிறமைச் சித்தி அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நூறு மாணவர்களுக்கு மடிக்கணனியும் வடபகுதியைச் சேர்ந்த நூறு இந்து மத குருக்களுக்கு பெறுமதியான பரிசில்களும் நாற்பது விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் பொங்கல் பரிசாக வழங்கப்படவுள்ளது.

சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான நூறு மடிக்கணனிகளே வழங்கப்படவுள்ளன. தைப்பொங்கலை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர், யாழ். அரச அதிபர், மேயர் மற்றும் வட பகுதி மக்களின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துள்ள தைப்பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும். வடக்கில் நடைபெறவுள்ள கலை கலாசார நிகழ்வுகளிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply