யாழ்ப்பாணத்தில் 5000 முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர் : இமெல்டா சுகுமார்

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட 5000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீளவும் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.1990களில் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே இவ்வாறு மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். 5841 முஸ்லிம்கள் இதுவரையில் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
வடக்கிலிருந்து வெளியேறிய அதிகமான முஸ்லிம்கள் புத்தளம், குருணாகல் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply