பிரிவினைவாத செயற்பாடுகளை ஆரம்பிக்க புலிகள் முயற்சி கனேடிய பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை

முன்னாள் புலித் தலைவர்கள் கனடாவில் வன்முறைகள் நிறைந்த பிரிவினைவாதக் குழுவின் செயற்பாடுகளை கனடாவில் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கனேடிய பாதுகாப்புப் புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கான முயற்சிகள் எவ்வளவு தூரம் விஸ்தீரணப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றித் துல்லியமாகத் தெரியாத போதும், குழுவொன்றை மீண்டும் இயங்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தெளிவாகியிருப்பதாக அரசாங்க அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

முன்னாள் புலித் தலைவர்கள் உட்பட 400 சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக இரண்டு கப்பல்கள் மூலம் கனடாவுக்குள் நுழைவதற்கு முயற்சிப்பதாக புலனாய்வு முகவர்கள் எச்சரித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையிலேயே கனடாவில் புலிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தமது நாட்டுக்குள் நுழைபவர்களைத் தடுக்கும் நோக்கில் குடிவரவுச் சட்டத்தை கனேடிய அரசாங்கம் இறுக்கியிருக்கும் நிலையில், முன்னாள் புலித் தலைவர்கள் உட்பட 400 பேர் கனடாவுக்குள் நுழையவிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 50ற்கும் மேற்பட்ட புலித் தலைவர்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply