சம்பந்தன் அப்படி சொல்லியிருக்க மாட்டார் : தலைவர் வீ.ஆனந்தசங்கரி

உடல்நலம் குன்றிச் சென்னையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இருநாட்களுக்கு முன்பு ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு சென்னையில் சந்தித்தேன். அவர் விரைவில் குணமடைந்து நாடு திரும்புவார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படிருப்பதாவது, 1972ம் ஆண்டு தொடக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களுடன் ஒன்றிணைந்து களங்கள் பல கண்டவர்கள் நாங்கள்.

32 வருட கால உறவில் கட்சிப்பணிகளிலும், பாராளுமன்றத்திலும் ஒன்றாகச் செயற்ப்பட்டவர்கள் நாங்கள். அன்றைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஆட்சேபித்து 1983ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை துறந்த 19 பேரில் நாமும் அடங்குவோம்.

இன்றைய தலைமுறையில் வரலாற்றைத் தெரியாதவர்களே பலர். இத்தகையச் செயலை செய்யக்கூடியவர் ஒருவரும் இன்று இல்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தேர்தலில் இணைந்து போட்டியிடும் முடிவை வெகுவாகப் பாராட்டி தன் ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்த சம்பந்தன் ´அரசுடன் பேச்சை வலுப்படுத்த கூட்டமைப்பின் கரங்களை வலுப்படுத்துங்கள்´ என்ற கருத்துப்பட, நான் சந்தித்த மறுநாளே, நிச்சயமாக கூறியிருக்கமாட்டார் என்பது மட்டுமல்ல கூறியிருக்கவும் முடியாது.

அரசைச் சந்திப்பது சிலருக்கு புதிதாக இருக்கலாம். நாம் இருவரும் மற்றும் பலரும் அரசைப் பலதடவைகள் சந்தத்துப் பேசியுள்ளோம். இக்கட்டத்தில் ஒருவரும் தம் இஸ்டம் போல அறிக்கைகள் விடுவதை நிறுத்தி துன்பத்தின் மத்தியில் பல ஆண்டுகள் வாழ்ந்துவரும் மக்களின் துன்பங்களுக்கு பரிகாரம் தேடுவோமாக.

வீ. ஆனந்தசங்கரி, தலைவர் தமிழர் விடுலைக் கூட்டணி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply