தமிழ் கட்சிகளின் பாரிய கூட்டணி: இறுதிக்கட்ட தீர்மானம் நாளை நண்பகல்
தமிழ் கட்சிகளின் ஒரு பாரிய கூட்டணி அமைக்கின்ற முயற்சிகளின் இறுதிகட்ட தீர்மானம் நாளை நண்பகல் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் கட்சிகளின் ஒரு பாரிய கூட்டணி அமைக்கின்ற ஒரு முயற்சியிலே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகிய நான்கு கட்சிகள் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து எடுகின்ற முயற்சிகளின் பலனாக ஈபிடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலை கூட்டமைப்பு ஆர்வம் காட்டமையால் அவர்களுடன் சந்திப்பு சாத்தியப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல சுற்று கூட்டங்கள் முடிவடைந்திருக்கின்ற சூழ்நிலையிலே, 7 கட்சிகள் உள்ளடங்களாக ஒரு பாரிய கட்சியினை அமைக்கின்ற முயற்சியிலே போதியளவிலே இருகட்சிகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி அவர்கள் ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு சென்னைக்கு சென்று அங்கு சுகயீனமுற்று இருக்கக் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடன் இருமணி நேரம் சந்தித்து பேசியுள்ளார். இதன்போது இரா.சம்பந்தன் முயற்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தற்போது புளொட் இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டு கட்சியுடன் இணைந்திருக்கின்றது.
ஆகவே ஏனைய மூன்று கட்சிகளும் நாளைய தினம் காலைவரை இந்த முயற்சிகள் வெற்றியளிக்குமா, இல்லையா என பேச்சு வார்தைகளில் ஈடுபடவிருக்கிறோம். நாளை நண்பகல் அளவில் பொதுமக்களுக்கு முடிவு பகிரங்கமாக அறிவிக்கப்படும்.என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply