பௌத்த பிக்குகளை தேர்தலில் நிறுத்தக் கூடாது : தினேஷ் குணவர்தன

பௌத்த பிக்குகளை தேர்தலில் நிறுத்தக் கூடாது என நீர் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் நியமனம் குறித்து அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.லங்கா சமசமாஜ கட்சி பௌத்த பிக்கு ஒருவரை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நிறுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் லங்கா சமசமாஜ கட்சியும், தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பௌத்த பிக்குகளை வேட்பாளராக நியமிப்பது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பௌத்த பிக்குகளை வேட்பாளராக நியமித்து அதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply