அரசைக் கண்டித்து ஐ.தே.க கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி
பெற்றோல் விலையை லீட்டருக்கு நூறுவாகக் குறைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதனை இதுவரை அரசாங்கம் அமுல்படுத்தாததைக் கண்டித்து எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் பேரணியையும் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியைக் கொழும்பில் எங்கு நடத்துவதென்பது குறித்த தகவலைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தற்போது கூறமுடியாதென அவர் தெரிவித்தார்.
பெற்றோல் விலை மட்டுமல்ல. சமையல் எரிவாயு,டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் உலக சந்தையில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் இதன் விலைகளை இன்னும் குறைக்கவில்லை.
இது தொடர்பாகவும் வழக்கொன்றைத் தாக்கல் செய்யப் போவதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply