உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இளையோர் பின்னடிப்பு
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் சட்டப்படி ஒவ்வொரு சபைக்குமான வேட்பாளர் பட்டியலில் 40 வீதமான வேட்பாளர்கள் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளையோராக இருக்க வேண்டும்.
வடக்கிலுள்ள இளையோர் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமது கட்சியில் போட்டியிடுவதற்கான இளம் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள வன்முறைகளும் இளையோர் அரசியலில் இறங்க ஆர்வம் காட்டாதிருப்பதற்கு ஒரு காரணம்.
அரசியலில் அல்லது சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டால் தமக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் யாழ்ப்பாணத்து இளையோர் இருக்கின்றனர்.
இதனால் அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முன்வருவதற்கு தயங்குகின்றனர்.
வேட்புமனுக்களை கையளிப்பதற்கான கால எல்லை முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டிய 40 வீதமான இளையோரைத் தெரிவு செய்வது சிரமமான காரியமே“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, வடக்கில் தற்போது நிகழும் வன்முறைகளால் உள்ளூராட்சித் தேர்தலில் இளையோரை போட்டியில் நிறுத்துவது முடியாத காரியமாகியுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியும் தெரிவித்துள்ளார்.
வன்முறைகள் காரணமாக மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
கிளிநொச்சிக்குச் செல்லும் எந்தவொரு மதிப்புமிக்க சிங்களவருமே அங்கு தமிழர்கள் படும் துன்பங்களைக் கண்டு வேதனையால் அழுவர்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply