அநுராதபுரம் சிறையில் மோதல் 3 பேர் பலி: 8 அதிகாரிகள் உட்பட 21பேர் காயம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் கைதிகள் 3 பேர் உயிரிழ ந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிறைச் சாலை அதிகாரிகள் 8 பேரும் அடங் குவதாக அநுராதபுர வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ. எம். ரி. பி. விஜேகோன் தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதால் சிறைச்சாலை அதிகாரிகள் துப் பாக்கிப் பிரயோகம் செய்ததில் கைதிகள் காயமடைந்தனர்.

கைதிகள் கற்களால் நடத்திய தாக்குதலால் சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த மோதலில் பிரதம ஜெயிலர் காமினி சில்வாவும் காயமடைந்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 50 க்கும் மேற்பட்ட சிறைச்சாலைக் கைதிகள் கூரை மீது ஏறி மறியல் செய்ததுடன் அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது கற்க ளால் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்பு இந்த நிலைமை மோசமடைய கலகக்காரர்களாக மாறி சிறைச் சாலைக்குள் தீ வைத்து ஆர்ப் பாட்டம் செய்தனர்.

பின்பு நிலை மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதி காரிகள் முயற்சியெடுத்தனர். அதனை கட்டுப்படுத்தமுடியாமல் போகவே சிறைச்சாலை அதிகாரிகள் துப் பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரி விக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிப் பிரயோக த்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதே வேளை கைதிகள் சிறைச்சாலை யிலிருந்து தப்பி யோட முயற்சி செய்துள்ளனர். இதனைத் தடுப்பதற் காக சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் நிலை மையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாரிய முயற்சியில் ஈடுபட்டனர். பொலிஸாரும் இராணு வத்தினரும் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிறைச்சாலையின் சிறைக் கூடங்கள் பலவற்றையும் சமையலறையையும் கைதிகள் டயர் போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டுள்ள காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங் குவ தற்கு வைத்திய குழுவொன்றை ஈடுபடுத்த வைத்தியசாலைப் பணிப் பாளர் டபிள்யூ. ரி. பி. விஜேகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply