போரை வென்ற அனுபவம் உலகுக்கு விளக்க மாநாடு – 54 நாடுகள் பங்கேற்கின்றன

பயங்கரவாதப்போரை வெற்றிகரமாக ஒழிப்பது தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் பெற்றுக் கொண்ட அனுபவம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு கொழும்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்தார்.
 
சுமார் 54 நாடுகளைச்சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங் களின் பிரதிநிதிகள், வாண்மையாளர்கள், புலமையாளர்கள் கலந்துகொள்ளவுள்ள இந்தக் கருத்தரங்கில் புதுடில்லியிலிருந்து சுமார் 30 பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெய சூரிய தெரிவித்தார்.
 
இராணுவத் தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்று கையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 21ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய நாடுகளில் இலங்கை இடம் பிடித்துள்ளதுடன் உலக நாடுகள் மத்தியில் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது. அந்த வகை யில் பயங்கரவாதத்தை இல்லா தொழித்த பெருமை இலங்கைப் படையினரை சார்ந் துள்ளது. இந் நிலையில் பயங்கரவாதத்தின் பிடி யில் சிக்குண்டுள்ள நாடுகள் அதிலிருந்து மீண்டுவருவதற்கு பயங்கரவாதத்தை வெற்றி கொண்ட நாடொன்றின் அனுபவம் மிகவும் பயனுடையதாக இருக்கும். இதனால் இலங்கை தனது அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது.
 
இதற்காக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டுள்ள நாடுகள் மற்றும் இலங்கை இராணுவத்துடன் தொடர்புகளை பேணிவரும் நாடுகள் என தெரிவுசெய்யப்பட்ட சுமார் 54 நாடுகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வுள்ளன. இந் நாடுகளுக்கான அழைப்பி தழ்கள் பாதுகாப்புச் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. வன்னி மற்றும் கிழக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக் கைகள் மற்றும் யுத்தத்தின் பின்னரான மீள் குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகள், கண்ணிவெடிகளை அகற்றுதல், இணக்கப் பாட்டுடனான நடவடிக்கைகள், நாட்டைக் கட்டியயழுப்புதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இக் கருத்தரங்கில் கவனம் செலுத்தப்படவுள்ளன.
 
அத்துடன் இலங்கையில் அணுகுமுறை வழமையான அணுகு முறைகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டது மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதில் இலங்கை எவ்வாறு வெற்றிபெற்றது என்பன தொடர்பி லும் இந்த கருத்தரங்கின் போது ஆய்வு செய் யப்படவுள்ளன.
 
இதேவேளை, வினைத்திறன் மிக்க பயங் கரவாத எதிர்ப்பு, தந்திரோபாயம், செயற்பாடு, தந்திரோபாயம் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள், விசேட தேவைகுறித்த பயிற்சிகள், பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் செயன் முறையில் மனித உரிமையாளர்களின் பாத் திரங்கள், அரசியல் சீர்திருத்தங்களை மேற் கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளன என அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply