வெளிநாட்டில் வாழும் ஆறு விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை நீதிமன்றம் பிடிவிராந்து

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஆறு தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திறந்த பிடி விராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.சர்வதேச காவல்துறையினரான இன்டர்போலின் உதவியுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்றைய தினம் நீதிமன்றில் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
 
குறித்த ஆறு முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற காரணத்தினால் குறித்த நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply