ஆளும் கட்சி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களி; போட்டியிடுவதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆளும் கட்சியின் வேட்பு மனுக்களை தயார் செய்த பிரதிநிதிகள் குழுவினரையும், சிரேஸ்ட உறுப்பினர்களையும் அழைத்து ஜனாதிபதி தமது அதிருப்தி வெளியிட்டுள்ளார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர்களும், சிரேஸ்ட உறுப்பினர்களும் மனம் தளரக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
தேர்தலில் போட்டியிடக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராயுமாறு அவர் கோரியுள்ளார். இதேவேளை, சின்ன சின்ன தவறுகளை காரணம் காட்டி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்றங்களில் மீளவும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட தொகுதிகளில் மீளவும் போட்டியிடுவதற்காக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்காக தாக்கல் செய்த பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply