உள்ளூராட்சி தேர்தலில் 1597 வேட்புமனுக்கள் ஏற்பு 450 மனுக்கள் நிராகரிப்பு
மார்ச் மாதம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருக்கின்ற 301 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளிடமிருந்து 1282 வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களிடமிருந்து 765 வேட்பு மனுக்களுமாக 2047 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் அரசியல் கட்சிகளின் 1134 வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களின் 463 வேட்பு மனுக்களும் என 1597 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகளின் 148 வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களின் 302 வேட்பு மனுக்களும் என மொத்தமாக 450 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏறுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு விருப்பு எண் வழங்குவதற்காக பெயர்களை அகர வரிசைப்படுத்தும் நடவடிக்கைகள் துரித்தப்படுத்தப்பட்டுள்ளன.
301 உள்ளூராட்சி மன்றங்களில் 3931 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மொத்தமாக 2047 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அடங்களாக நாட்டில் 335 மன்றங்கள் இருக்கின்றன.
25 மாவட்டங்களில் மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்ற நிலையில் 267 சபைகளின் ஆட்சிகாலம் கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கலைக்கப்பட்டன. அத்துடன் ஏற்கனவே ஆட்சிகாலம் முடிவடைந்திருந்த நிலையில் தேர்தல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்த 34 சபைகளுக்கும் என மொத்தமாக 301 சபைகளுக்கே தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த சபைகளுக்கு வேட்பு வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 26 மனுக்களும், ஐக்கிய தேசியக்கட்சியின் 07 மனுக்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 04 மனுக்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 02 வேட்பு மனுக்களும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 05 மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இம்முறை அம்பாறை மாவட்டத்திலேயே ஆக கூடுதலாக 164 வேட்பு மனுக்களும் கிளிநொச்சியில் ஆக குறைந்த 15 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் குருணாக்கல் மாவட்டத்திலேயே ஆக கூடுதலான 34 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுளளன. மன்னார் மாவட்டத்தில் எந்த வொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply