கூட்டமைப்பு ஜனாதிபதி பெப்ரவரி 3ல் சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 21ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் காரணமாக பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட் டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட முக்கியமான விடயங்களை அடிப்படையாக கொண்டு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுக்கள் அடுத்த மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
“இந்தச் சந்திப்பின் போது தமிழ்மக்களின் உடனடிப் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும். குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு, காணாமற்போனவர்கள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியன குறித்து கவனம் செலுத்தப்படும். அத்துடன் தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு காண்பது தொடர்பாகவும இருதரப்பும் பேச்சுக்களை நடத்தவுள்ளன“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply