இலங்கை மக்களும் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தக் கூடிய சூழ்நிலை உருவாகுமாம் : மங்கள
இலங்கை மக்களும் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எகிப்து மற்றும் டியூனிசீயா ஆகிய நாட்டு மக்களை இலங்கை மக்களும் பின்பற்ற நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஜனநாயக உரிமைகள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டால் அரசியல் கட்சிகளின் பின்புலமின்றி மக்களாகவே போராட்டங்களை நடத்துவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தாக்குதலுக்கு இலக்காகி சேதங்களை எதிர்நொக்கிய லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊழியர்களுக்கு கணனி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இவ்வாறான தாக்குதல்களை மக்கள் தொடர்ந்தும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும், எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தல்களில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவப் பிரச்சினை எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply