ஐ.நா மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வடக்கு அபிவிருத்தி செய்யப்படும்
ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வடக்கு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் அபிவிருத்தி நிலைமைகளை வடக்கிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு ஒத்துழைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளன. வீடுகளை அமைத்தல், விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுதல், உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. வடக்கு அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் நாடுகள் முதலீடு செய்ய வேண்டுமென அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply