இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் மீண்டும் பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் மீண்டும் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கினால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக அடைமழை பெய்து வருகின்றது. நேற்று அதிகாலை முதல் கடும் மழை பொழிந்ததனால் இந்த மூன்று மாவட்டங்களிலும், தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து பெருமளவான குடும்பங்கள் பொது இடங்களிலும் நலன்புரி முகாம்களிலும் தங்கியுள்ளன.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக பெருமளவான பாடசாலைகள் நேற்று முற்பகலுடன் மூடப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, வவுணதீவு, வெல்லாவெளி, காத்தான்குடி, ஏறாவூர் நகர், பட்டிப்பளை, மண்முனை வடக்கு, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையில் லகுகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹுலனுகையில் சோளச் செய்கைக்கான பாதுகாப்பு அரனிலிருந்த நான்கு பேர் வெள்ளத்தால் அடித்துச் செயல்லப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் இருவர் திருமணமாகி இரு மாதங்களேயான புதுமணத் தம்பதிகளாவர் என தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply