முள்ளியவளை, தண்ணியூற்று பிரதேசங்களுக்குள் படையினர் பிரவேசம்

வன்னிப் படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 59வது படையணி புலிகளின் மிக முக்கிய பகுதியில் ஒன்றான முள்ளியவளைப் பகுதியை நோக்கி நேற்று (டிச:25)பிற்பகலிருந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஒட்டுசுட்டான் –முல்லைத்தீவு (ஏ34) பாதையில் முள்ளியவளை அமைந்துள்ளது. இது இப்பகுதியில் மிகப் பெரிய நகரமாகும். 16வது இலகு காலால் படையினர்(16SLLI) புலிகளின் எதிர்தாக்குதல்களை முறியடித்து, இன்று (டிச:26) காலை முள்ளியவளை பகுதிக்குள் சென்றுள்ளதால் அங்கு உக்கிர மோதல்கள் இடம் பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கவசவாகனங்கள், பீரங்கிகள் மற்றும் காலால் படையினரும் ஒருங்கிணைத்து புலிகளின் தாக்குதல்களை முறியடித்து வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படையினரின் இன்னொரு தொகுதி ஏ34 பாதையில் முள்ளியவளையில் இருந்து 2.5 கி.மீ. வடகிழக்காக அமைந்துள்ள தண்ணியூற்று பகுதியை அண்மித்துள்ளனர். இப்பகுதியில் 7வது கெமுனு படைப்பிரிவினர் நிலைகொண்டுள்ளதாக களச்செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளியவளைக்கு வடக்கில் அமைந்திருந்த 40 அடிஉயரமான தொடர்பு சாதன கோபுரத்தை நேற்று – 25ம் திகதி படையினர் கைபற்றியிருந்தனர். இக்கோபுரத்தை வளைத்து மூன்று பாரிய பங்கர்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் இது புலிகளின் வன்னித் தளங்களுக்கிடையலான தொடர்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் இராணுவச் செய்திகளின் தெரிவிக்கின்றன.

மேலும் நான்காவது செயலணிபடையினரும் 59வது படையணியினரும் புளியங்குளம் – ஒட்டுசுட்டான்(ஏ34) பாதையை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply