அரசியல் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் திட்டமில்லை : பத்மநாதன்
அரசியல் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் திட்டமில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் ஊடாக மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான உதவிகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார்.
புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து குமரன் பத்மநாதன் வடக்கிற்கு விஜயம் செய்ததாகவும், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதே தமது பிரதான கவலை என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் குமரன் பத்மநாதன் இன்னமும் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள தமது அமைப்பு ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply