தற்போதைய ஆட்சியாளர்களின் பிழைகளினால் நாடு சபிக்கப்பட்டுள்ளது : ரணில்
தற்போதைய ஆட்சியாளர்களின் பிழைகளினால் நாடு சபிக்கப்பட்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிழையான அணுகுமுறைகளினால் தெய்வ குற்றம் நேர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி ஒன்றை நிறுவுவதன் மூலம் மட்டுமே நாட்டில் இடம்பெற்று வரும் அழிவுகளை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் பிழைகளினால் அண்மைக்காலமாக நாட்டில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்வதாகவும் இதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply