அவர்களின் திறமையும் எங்களின் பலவீனமும்
யாழ்ப்பாணத்தவர்கள் வேலை செய்வதில் பின்னிற்பவர்கள் மட்டுமல்ல, இன்ன வேலை என்றால்தான் அதைச் செய்யமுடியும் என்றும் நிபந்தனை விதிப்பவர்கள். இதனால் அவர்கள் வேலை செய்யக்கூடிய பொன்னான காலத்தை வீணடிக்கின்றனர். இப்போதெல்லாம் தென் பகுதியைச் சேர்ந்த பலர் யாழ்ப்பாணத்தில் எத்தனையோ வகையில் பணம் சம்பாதிக்கின்றனர்.
அண்மைக்காலமாக, யாழ்ப்பாணத்தின் புற நகர்ப் பகுதியில் அதிகாலையிலும் மாலையிலும் இளைஞன் ஒருவர் மோட்டார் வண்டி ஒன்றில் பாண், பணிஸ், கேக் உள்ளிட்ட உணவுப் பண்டங் களை வீடுவீடாகச் கொண்டு சென்று விற்பனை செய்கின்றார். சுகாதார முறைப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் உணவுப் பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.
குச்சொழுங்கைக்கெல்லாம் சென்று தனது விற்பனையை அந்த இளைஞர் முடுக்கி விட்டுள்ளார். வியாபாரம் தாராளம். அதிகாலை வேளையில் வீடுதேடி உணவுப் பண்டம் வருவது எவ்வளவோ வசதியல்லவா? அந்த இளைஞனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நல்ல முயற்சி என்று நினைத்துக் கொண்டு இந்த இளைஞனை விசாரித்தபோது அவர் ஒரு சிங்கள இளைஞர் என்பது தெரிய வந்தது. பார்த்தீர்களா அப்படியயாரு முயற்சி பற்றி நாம் சிந்தித்தோமா எனில் இல்லவே இல்லை. இப்போது அந்த இளைஞன் வீடுவீடாகச் சென்று பாணை விற்பனை செய்வதால் அப்ப குதிக் கடைகளில் பாணின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.
வியாபாரம் என்றால் நுட்பம் இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கவேண்டும். தென்பகுதி இளைஞன் ஒருவன் அதிகாலை வேளையில் யாழ்ப்பாணத் துக் குச்சொழுங்கை எல்லாம் சென்று தனது விற்பனை முயற்சியைச் செய்வது கண்டு நாம் விழிப்படைய வேண்டும். எத்தனையோ முயற்சிகள் உண்டென்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நாங்கள் உறங் கும்போது அவர்கள் விழித்திருந்து விற்பனை நடத்தும் திறனை மரியாதையோடு கற்றுக் கொள்வது அவசியம்.
இது மட்டுமல்ல யாழ்ப்பாணத்து பனங்கிழங்கை வேண்டி யாழ்ப்பாணத்தாருக்கே விற்பனை செய் யும் சிங்கள வியாபாரிகளின் முயற்சியை நினைக் கும்போது தலை சுற்றுகின்றது. எங்கள் பொருளை எங்களிடம் வேண்டி எங்களுக்கே விற்பனை செய்து இலாபமீட்டுதல் என்பதில் அவர்களின் திறமை மட்டுமல்ல எங்களின் பலவீனமும் உண்டென்பது உணர்தற்குரியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply