தெற்கு சூடான் அமைச்சர் பாதுகாவலர் சுட்டுக்கொலை

இரண்டாக பிரிய உள்ள சூடான் நாட்டின் தெற்கு சூடான் நாட்டு அமைச்சர் மற்றும் தனது பாதுகாவலர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க நாடான சூடானை இரண்டாக பிரிப்பதற்கான மக்கள் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது. வரும் ஜூலை மாதம் முதல் வடக்கு,தெற்கு ‌என இரு சூடான் நாடுகள் உதயமாக உள்ளன.

இந்நிலையில்,தெற்கு சூடானின் கூட்டுறவு,மற்றும், புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஜிம்பிலெம்மி -மில்லா. இவர் தலைநகர் ஜூபா நகரில் உள்ள அமச்சரவை அலுவலகத்திற்கு வழக்கமான பணிகளை கவனிப்பதற்காக வந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அமைச்சரை நோக்கி சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அமைச்சரின் பாதுகாவலரையும் சுட்டுக்கொன்றார். பலத்த காயமடைந்த அமைச்சர் மில்லா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 இது குறித்து சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கர்னல் பிலிப் அக்யூர் என்பவர் கூறுகையில், சம்பவ நடந்த அடுத்த நிமிடமே பாதுகாவலரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். கொலையாளியான மர்மநபர் முன்பு அமைச்சர் மில்லாவின் கார் டிரைவராக இருந்துள்ளார். நெருங்கிய உறவினர் ஆவார். ஆனாலும் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் தெரியவில்லைஎன்றார். ‌அமைதியான முறையில் சூடான் பிரக்கப்படுவதற்கான மக்கள் வாக்கெடுப்பு முடிந்துள்ள நிலையில், தனி நாடாக உதயமாகவுள்ள தெற்கு சூடானின் அமைச்சர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply