பதவி விலகமாட்டேன் முபாரக் தொடர்ந்து பிடிவாதம்
எகிப்து நாட்டு மக்கள் மாற்றம் ஏற்பட விரும்புகின்றனர். இனி வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆகையால் அடுத்து வரும் செப்டம்பரில் தேர்தல் நடைபெறும் அதுவரை நான் அதிபர் பதவியில் நீடிப்பேன். இதில் வெளிநாட்டு ஆதிக்கத்திடம் ஆலோசனை கேட்கவில்லை என அதிபர் ஹோஸின் முபாரக் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.
எகிப்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வந்த அதிபர் முபாரக்கிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் இளைஞர்கள் கடந்த 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிட மறுத்து தக்ரிர் சதுக்கத்தில் குவிந்துள்ளனர். இருப்பினும் தொடர்நது பதவி விலகாமல் பிடிவாதம் காட்டி வந்தார். இரு வாரங்களுக்கும் மேலாக போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், அதிபர் முபாரக் எகிப்து நாட்டு மக்களுக்கு டி.வி. வாயிலாக நேற்று இந்திய நேரப்படி நள்ளிரவு 2.00 மணியளவில் பேசினார்.அப்போது முபாரக் கூறுகையில், செப்டம்பரில் நடக்கும் தேர்தலில் புதிய ஆட்சி மலரும்,
அதுவரை நான் பதவியில் நீடிப்பேன்.தற்போது சில அதிகாரங்களை துணை அதிபரிடம் வழங்குகிறேன். இதற்கிடையில் பிரதம் அகமதுசஃபீக் கூறுகையில், எந்த ஒரு முடிவும் அதிபரின் கையில் தான் உள்ளது என கைவிரித்துவிட்டார். இதனால் அதிபர் முபாரக் பதவியை கெட்டியாக பிடித்து கொண்டு விலக மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிபர் பதவியை விட திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply