இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 3000 படைவீரர்கள் சரண்
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 3000 படைவீரர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த சுதந்திர தினமன்று அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி தப்பிச் சென்ற படைவீரர்கள் சரணடைந்துள்ளனர். பல்வேறு நிலைகளை வகித்து வந்த படைவீரர்கள் இவ்வாறு சரணடைந்துள்ளனர்.
கடந்த 4ம் திகதி முதல் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 3125 படைவீரர்கள் இவ்வாறு தமது படையணிகளில் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 4000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 50000 இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைவீரர்கள் கைது செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply